மின்ஹாஜுல் இஸ்லாம்
சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்
கோவை கணுவாய் பகுதியில் 1989 முதல் ஈமான், கல்வி மற்றும் சமுதாய வளர்ச்சிப் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனித ஆன்மீகத் தலம்.
எமது பள்ளிவாசல் வரலாறு
கோவை இரயில் நிலையத்திலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் ஆனைகட்டி செல்லும் வழியில் கணுவாய் அமைந்துள்ளது. பூர்வீகமாக இஸ்லாமியர்கள் கணுவாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான நவாப் ஊர், சுல்தானியாபுரம், பன்னீர் மடை ஆகிய ஊர்களில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், கணுவாய் பகுதியில் வாழ்ந்த மர்ஹும் A. அன்வர் பாஷா, மர்ஹும் நூர் முஹம்மது, மர்ஹும் S. சாப்ஜான், மர்ஹும் A.K. அப்துல்லா குட்டி, மர்ஹும் M.P. மொய்துன்னி மற்றும் பல ஜமாஅத்தார்களின் முயற்சியால் பள்ளிவாசல் அமைக்க முயன்று, இறையருளால் 18.08.1989 வெள்ளிக்கிழமை அன்று 'மின்ஹாஜுல் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் மற்றும் மத்ரஸா' என்ற பெயரில் திறப்பு விழா செய்யப்பட்டது.
தொடக்கத்தில் மலையடிவாரத்தில் இயங்கி வந்த பள்ளிவாசல், பின்னர் 2002-ஆம் ஆண்டு ரமளான் பிறை 23 அன்று தற்போதைய புதிய இடத்திற்கு மாற்றப்பட்டு புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் 2015 டிசம்பர் 25 அன்று சிவில் இன்ஜினியர் I. முஹம்மது பைசல் மேற்பார்வையில் மேலும் 3000 சதுர அடி கூடுதல் விரிவாக்கக் கட்டிடம் திறக்கப்பட்டது.
வரலாற்று மைல்கற்கள்
மலையடிவாரத்தில் பள்ளிவாசல் மற்றும் மத்ரஸா முறைப்படி தொடங்கப்பட்டது.
வக்ஃப் நன்கொடையாளர்கள் உதவியோடு தற்போதைய சொந்த இடத்திற்கு மாற்றப்பட்டு புதிய கட்டிடம் திறப்பு.
கல்வி மற்றும் சமூகப் பணிகளுக்காக 3000 ச.அடி கூடுதல் கட்டிடம் திறக்கப்பட்டது.
நிறுவனர் மற்றும் நன்கொடையாளர்கள்
இட நன்கொடையாளர்கள்
ஹாஜி A. அப்துல் ஹமீது (முத்தவல்லி)
மூக்கரை, இராமநாதபுரம் மாவட்டம்
ஜனாப் A. அப்துல் காதர்
இஸ்லாமிய புத்தக நிலையம், கீழக்கரை
இராமநாதபுரம் மாவட்டம் மூக்கரையை பூர்வீகமாகக் கொண்ட கோவையில் வசிக்கும் மதிப்பிற்குரிய ஹாஜி A. அப்துல் ஹமீது (முத்தவல்லி) மற்றும் அவரது சகோதரர் ஜனாப் A. அப்துல் காதர் (இஸ்லாமிய புத்தக நிலையம், கீழக்கரை) ஆகிய இருவரும் தங்களது சொந்தப் பொருளில் இந்த இடத்தை வாங்கி பள்ளிவாசல் கட்டி வக்ஃப் செய்துள்ளார்கள்.
முயற்சியாளர்கள்
அக்பர் கான், மெளலானா தாஜுதீன் முன்ஷி ஹழ்ரத் மற்றும் மெளலவி அல்ஹாஜ் M.A. அப்துர் ரஹீம் இம்தாதி, பாகவி ஹழ்ரத் ஆகியோர் துவக்க விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.
தற்போதைய நிர்வாகம் & பொறுப்பாளர்கள்
ஹாஜி A. அப்துல் ஹமீது
ஜனாப் A.K. முகமது இக்பால்
மௌலவி H. முஹம்மது காசிம் இம்தாதி
2000 முதல் சேவை
ஜனாப் S. கமால்பாஷா
2008 முதல் சேவை
S. இம்ரான் & S. ஜான்பாஷா
முன்னாள் நிர்வாகக் கமிட்டிகள்
வெவ்வேறு காலகட்டங்களில் பள்ளிவாசல் நிர்வாகத்தை முன்னெடுத்த பொறுப்பாளர்கள் விபரங்கள்.
துவக்கக் கமிட்டி (ஆகஸ்ட் 1990)
பள்ளிவாசலின் சிறப்பான வரலாற்றுத் தருணங்கள்
"அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களைச் செலவிடுபவர்களின் உதாரணம் ஒரு தானியத்தைப் போன்றது, அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது, ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன." (அல்-குர்ஆன் 2:261)
அல்-குர்ஆன் (2:261)உங்கள் பள்ளிவாசலை ஆதரிக்கவும்
மத்ரஸா கல்வி, ஏழை எளியோரின் நலத்திட்டங்கள் மற்றும் பள்ளிவாசல் பராமரிப்புப் பணிகளுக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள்.